Secret Of Astrology
ஜோதிடம் என்பது ஒரு அறிவியல். நமது முன்னோர்கள் வகுத்து வைத்த அழகான ஆராய்ச்சி கணிதம். கணிதத்தில் மனிதனின் வாழ்வின் அனைத்து நிகழ்வுகளையும் தெள்ளத்தெளிவாக பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்தும் கணக்கிடப்பட்டு உள்ளது. தற்போது உள்ள கால மாற்றங்கள் அறிவியல் வளர்ச்சிபெற்ற நிலையில் இந்த கணிதம் சாதாரண மக்களாலும் புரிந்துகொள்ளும் அளவிற்கு பல சுலபமான வழிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த புத்தகத்தில் வாசகர்கள் புரிந்துகொள்ளும் அளவிற்கு மிக சுலபமான முறையில் ஜோதிட அடிப்படைகளும் அதோடு சில விதிகளும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதை பயன்படுத்தி ஒரு மனிதன் தனது வாழ்வின் அமைப்பு எப்படி உள்ளது, எது பொருந்தும், எது தேவையற்றது என்று புரிதல்களோடு தனது வாழ்வினை சரியான பாதையில் நகர்த்தலாம். அதோடு ஜோதிட ஆர்வம் இருப்பவர்கள் இதனை படித்து புரிந்துகொண்டு இதனை பல மனிதர்களின் வாழ்வினை ஆராய்ச்சி செய்து ஆயிரக்கணக்கான மனிதர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக இருந்து அவர்களின் வாழ்க்கையை அழகாக மாற்றலாம். எமது புரிதலில் இது இறைவன் கொடுத்த மாபெரும் பரிசாகவே நாம் உணர்கிறோம். எம்மை பொறுத்த வரையில் இந்த கணிதம் மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து விலங்குகளுக்கும் கூட இது சரியான புரிதலை தரும். இதை அனைவரும் படித்து அறிந்து புரிதல்களோடு செயல்பட்டால் கிடைத்தற்கரிய மானிடப்பிறப்பு இறைவனின் மாபெரும் பரிசு என்று உணரலாம்.